Breaking News

மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்! முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இத்திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு அவர்கள் 12ம் வகுப்பு நிறைவு செய்தவுடன் மாதம் ₹1000 வழங்கப்படும்!

மேலும் மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்

சென்னை ஐஐடி வளாகத்தில் முதல்வர் திறனறி தேர்வு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்:-

திறனறி தேர்வு திட்டம்’ என்ற முக்கியமான புதிய திட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  தமிழக அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகையாக பன்னிரண்டாம் வகுப்பை முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் 1,000 வழங்கப்படும் என்றார்

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback