அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் tnstc complaint number | government bus complaint number
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 1500 மற்றும் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் 18005991500 என்ற இந்த கட்டணமில்லா எண்ணில் 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம்.
அரசு பேருந்து பயணிகள் இந்த கட்டணமில்லா எண்ணில் எளிதாகப் புகார் அளிக்கலாம்.
மேலும் அரசு பஸ் http://arasubus.tn.gov.in/ என்ற இணையதளமும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்திற்குச் சென்றும் அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
இந்த புகார் எண்ணில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், உணவகங்கள் விதிமுறை மீறல் என அனைத்து விதமான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.
மேலும் பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட பிறகு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு மீண்டும் குறுந்தகவல் தெரிவிக்கப்படும்.
போக்குவரத்துக் கழகங்களில் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் போது அதன் வழித்தட விபரங்கள், புறப்படும் மற்றும் சேருமிடம், நேர அட்டவணை, கட்டண விபரம் குறித்த தகவல்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. http://www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பொதுமக்கள் பார்த்து பயன் அடையலாம்.
tamilnadu government bus complaint number
tamilnadu transport corporation
tn transport corporation
tnstc contact number
tnstc complaint number
bus helpline number
tnstc customer care
online bus complaint
tamilnadu government bus complaint number
tamil nadu government bus complaint number
transport complaint number
st bus helpline number
Tags: முக்கிய செய்தி