Breaking News

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது இந்தியாவில் தெரியுமா solar Eclipse 2023

அட்மின் மீடியா
0

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தை காலை 7:04 மணி முதல் மதியம் 12:29 மணி வரை காணலாம்.  இந்த முதல் சூரிய கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் என கூறப்படுகின்றது

மேலும் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் நேரடியாகப் பார்க்க முடியாது. என கூறப்படுகின்றது. மேலும் அக்டோபர் 14ஆம் தேதி இன்னொரு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

ஹைபிரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?

ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணம் ஆகியவை ஒன்றிணையும் நிகழ்வு ஆகும். 

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.

நிங்கலூ  சூரிய கிரகணம்

ஆஸ்திரேலியாவின் வட மேற்கு எக்‌ஷ்மவுத் கல்ஃப் எனும் நிங்கலூ பகுதி. இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகப் பெயரிடப்பட்டுள்ள கடற்பரப்பைச் சுற்றியுள்ள பகுதிகளை நிங்கலூ பகுதி என குறிப்பிடப்படுகிறது.

இந்த பகுதியில் ஏப்ரல் 20ல் நிகழும் சூரிய கிரகணம் தெளிவாக தெரியும் என்பதால் இந்த கிரகணத்திற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயர் வந்துள்ளது.

150 ஆண்டுகளுக்கு பிறகு:-

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு ஆஸ்திரேலியாவில் முழுமையாக தெரியும்

பொதுவாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. 

20ந் தேதி நடக்கும் பூரண முழு சூரிய கிரகணம் அடுத்து 2172-ம் ஆண்டுதான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய நேரப்படி ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது.இந்த கிரகத்தின் உச்ச நிகழ்வாக 4.29 மணி முதல் 4.30 வரையான குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது.

இந்த கிரகணம் தெரியக்கூடிய இடத்தில் இல்லாதவர்கள், வானிலை ஆராய்ச்சி மையம் ஒளிபரப்பு செய்யக்கூடிய நேரலை காணொளியில் பார்த்து ரசிக்கலாம்.சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாகப் பார்kககூடாது சூரிய ஒளியைப் பார்க்க சிறப்பு கண் கண்ணாடி அவசியம் ஆகும்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback