Breaking News

தமிழகத்தின் முதல் முறையாக சென்னை ஈ.சி.ஆர் இல் மிதவை படகு உணவகம் வீடியோ பார்க்க ECR Boat house video

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் சென்னை ஈ.சி.ஆர் சாலை முட்டுக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் துவங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத்தொகுதி உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் முட்டுக்காடு ஊராட்சியில் பிரமாண்டமான மிதவை படகு  உணவகம் கட்டுமான பணி துவக்க விழாவை அமைச்சர் மாண்புமிகு  சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு கே.ராமசந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக  செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் மிதவை உணவகம் அமையவுள்ளது. முட்டுக்காடு ஏரியில் பயணித்தவாறு அந்த உணவகத்தில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம்.

மிதவை உணவகம் சிறப்பம்சங்கள்:-

125 அடி நீளம் 25 அடி அகலத்தில் 2 அடுக்குகளை கொண்டிருக்கும்

தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி

இந்த படகில் சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளது.

ஏரியில் நீரின் ஆழம் குறைவாக இருந்தால் கூட அந்த படகு மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Kishoreamutha/status/1639118136447488001

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback