புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமியின் முதல் அறிவிப்பு
ஏப்ரல் 5ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் வழங்கப்படும்- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 - புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.
கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள்