Breaking News

சென்னையில் தனியார் பேருந்துகள் அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு

அட்மின் மீடியா
0

சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ‘Gross Cost Contract’ என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளது

சென்னையில் அரசு பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் வழங்கி வருகிறது. பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து சேவை, முதியவர்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. Gross Cost Contract முறையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025-ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இந்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback