Breaking News

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்




அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்டவிதி: 20 (அ); பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, "கழகப் பொதுச் செயலாளர்" கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்” என்ற விதிமுறைக்கு ஏற்ப "கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.


வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் நாள்:-

18.03.2023 - சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை )

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்:-

19.03.2023 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை

வேட்பு மனு பரிசீலனை:-

20.03.2023 திங்கட் கிழமை காலை 11 மணி

வேட்பு மனு திரும்பப் பெறுதல்:-

21.03.2023 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை 

வாக்குப் பதிவு நாள்:-

26.03.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

வாக்கு எண்ணிக்கை:-

 27.03.2023 திங்கட் கிழமை காலை 9 மணி முதல்

கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்குப் போட்டியிட கழக உடன்பிறப்புகள், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில்விரும்பும் கட்டணத் தொகை ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

"கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback