Breaking News

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர்

அட்மின் மீடியா
0

 ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பி கூடுதலாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தல்

 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. 

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதாவைத்தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தது.

இந்த சட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்

 

 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback