Breaking News

சவூதியில் உம்ரா பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்து தீ பிடித்து விபத்து 20 பேர் மரணம் வீடியோ இணைப்பு hajj pilgrims were killed in a bus accident

அட்மின் மீடியா
0

சவுதி அரேபியாவில் மக்கா நோக்கிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 ஹஜ் யாத்ரீகர்கள் பலி, 29 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது


புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தில் மோதி கவிழ்ந்ததில் தீப்பிடித்ததில் குறைந்தது 20 பேர் மரணமடைந்தார்கள் மற்றும் 29 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது

மதினாவில் இருந்து புனித நகரமான மெக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து சவூதி அரேபியாவின் தென் பகுதியில் உள்ள ஆசிர் மாகாணத்தில் sஎன்று கொண்டு இருந்த போது பிரேக் செயலிழந்ததால் பாலத்தில் மோதி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆகவும், மேலும் மொத்த காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தோராயமாக 29 எனவும் அல்-எக்பரியா செய்தி சேனல் தெரிவித்துள்ளது. அந்த பேருந்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.இந்த சம்பவத்தை அறிந்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் குழுக்கள் மற்றும் ரெட் கிரசண்ட் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்கள் யார் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றவிவரம் தெரிவிக்கவில்லை, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர், விவரங்களை வெளியிடவில்லை.

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய புனித தளமான மஸ்ஜித் அல்-ஹராம் அமைந்துள்ளதால், வருடாந்திர ஹஜ் யாத்திரையானது நாட்டில் விரிவடைந்து வரும் சுற்றுலாத் துறையின் முக்கிய பகுதியாகும். 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/aprajitanefes/status/1640562494287790082

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback