Breaking News

வாட்ஸ்அப் மூலம் ரயில் பயணங்களில் உணவு ஆர்டர் செய்யலாம்... எப்படி...முழு விவரம். Now Order Online Food by Whatsapp Indian Railways starts new service

அட்மின் மீடியா
0

ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்: இந்திய ரயில்வே புதிய சேவையைத் தொடங்கியது 

பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ்-அப் எண்ணை அறிவித்துள்ளது. 

ஆன்லைன் வாயிலான உணவை வாட்ஸ்-அப் மூலம் பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் பின்னூட்டம், கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதியை நிறுவனம் வழங்கும். www.catering.irctc.co.in மற்றும் அதனுடைய செயலி மூலம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக நிறுவனம் மின்னணு வாயிலாக உணவு வழங்குதல் சேவையைத் தொடங்கியது. 

ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த இந்த வாடிக்கையாளருக்கு வாட்ஸ்-அப் எண் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும். தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள்  வழங்கப்படுகின்றன.


  எப்படி...முழு விவரம்.

முதலில் நீங்கள் ஜூப் வாட்ஸ்அப் சாட்போட் எண் +91-8750001323  ஐ உங்கள் மொபைலில் சேமிக்கவும். 

அடுத்து உங்கள் வாட்ஸ்அப்பில் அந்த எண்ணில் உங்களின் 10 இலக்க PNR எண்ணை பதிவிடவும்

அடுத்து தேவையான உணவை தேர்தெடுத்து கொள்ளுங்கள்

உங்கள் உணவை டெலவரி  செய்ய விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும்.

அடுத்து கட்டண முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் பெறுவார்கள்.

உணவை ஆர்டர் செய்து பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.

ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை அடைந்தவுடன் உங்கள் உணவை டெலிவரி செய்யப்படும்.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback