Breaking News

ஜப்பான் தீவில் திடிரென வந்த ஆயிரக்கணக்கான காகங்கள் வைரல் வீடியோ Mysterious crow gathering in Japan goes viral

அட்மின் மீடியா
0

ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் திடிரென ஆயிரக்கணக்கான காகங்கள் பறப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியைந்தனர்.

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன. இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதேபோன்ற ஒரு விசித்திரமான சம்பவத்தில், சீனாவின் மங்கோலியா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் ஆடுகள் வட்டமாக அணிவகுத்து செல்வதை வீடியோவில் காணமுடிந்தது. அதில் காணப்பட்ட செம்மறி ஆட்டு மந்தை 10 நாட்கள் சாப்பிடவோ, குடிக்கவோ அல்லது தூங்கவோ கூட நிற்காமல் ஒரு வட்டத்தில் அணிவகுத்துச் சென்ற வீடியோ நினைவிருக்கும் அதேபோல் 

துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/doyaksec/status/1623585967524265985

Unusual gathering of crows in Japan

Thousands of crows flock streets of Japanese island

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback