Breaking News

மனிதநேய ஜனநாயக கட்சியில் இருந்து தமிமுன் அன்சாரி நீக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த போட்டி மாநில பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மனிதநேய மக்கள் கட்சியில் செயல்பட்டு வந்த தமிமுன் அன்சாரி  2015 ல் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன்  மனிதநேய ஜனநாயக கட்சி. என்று தொடங்கினார், அதன்பின்பு 2016 ம் ஆண்டு  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)யில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் திருச்சி சாலை சந்திரா மகாலில் நடைபெற்றது.


மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் கூட்டத்தில் பொது செயலாளராக ஹருன் ரசீது நியமனம் செய்யப்பட்டார், மேலும் இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி நீக்கப்பட்டார்.

அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி ஒருதலைபட்சமாக தன்னிசையாக செயல்பட்டு வந்த காரணத்திற்காக ஆறு மாத காலத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback