ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே போல ஓபிஎஸ் தரப்பில் செந்தில்முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை வழக்கு சென்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துகேட்டு வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை இன்று மதியம் 3 மணிக்கு அளிக்க உள்ளனர்.
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று நடந்த ஆலோசனைக்குப் பின்னர் அவரது ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதன் வெற்றிக்காக பாடுபடுவோம். ஈரோடு கிழக்கில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு .ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக ஈரோட்டில் வாக்கு சேகரிப்போம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர்.
Tags: அரசியல் செய்திகள்