நிலநடுக்க கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தம்பியை பாதுகாக்கும் சிறுமி நெஞ்சை உலுக்கும் வீடியோ
நிலநடுக்க கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தம்பியை பாதுகாக்கும் சிறுமி நெஞ்சை உலுக்கும் வீடியோ
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தில் துருக்கி - சிரியா எல்லை அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதை அடுத்து அதிகாலை வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
இதுவரை 7700 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, இதில் பல குழந்தைகள் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்,
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது, பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்