Breaking News

இந்தியாவில் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை மத்திய அரசு அறிவிப்பு Govt bans 138 betting, 94 loan apps

அட்மின் மீடியா
0

சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 


உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 லோன் கடன் வழங்கும் செயலிகளை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்த செயலிகள் தடைசெய்துள்ளது மத்திய அரசு.

மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெற்ற தனிநபர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே இதே சட்டத்தின் கீழ் TikTok மற்றும் PUBG Mobile போன்ற பயன்பாடுகள் இதற்கு முன்பு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

India moves to ban 138 betting, 94 loan lending apps with China link reportedly over security concerns

Indian Govt To Ban And Block 138 Betting Apps And 94 Loan app

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback