திருப்பூரில் தமிழக தொழிலாளர் வடமாநிலத் தொழிலாளர்கள் மோதல் - வைரல் வீடியோ காவல்துறை விளக்கம் North Indians Attack Tamil People
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம்,கொல்கத்தா, குஜராத், உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூர் பின்னாலாடை தொழிற்சாலையில் தமிழக ஊழியர்களை விட குறைந்த ஊதியம் பெற்று கொண்டு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை வேலை செய்வதால், பின்னலாடை நிறுவனங்களும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் சேர்த்துக் கொள்கின்றனர்.
வடமாநிலத் தொழிலாளர்களால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் இயங்கி வரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஜனவரி 14-ம் தேதி அங்குள்ள டீக்கடையில் சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழகத் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர் ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இணைந்து, கற்கள், கட்டைகள் கொண்டு தமிழகத் தொழிலாளர்களை விரட்டி விரட்டி தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/welovetirupur/status/1618654451866427397
இந்த செய்தி குறித்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்
அதன் காரணமாக அந்த நபர் ரியா ஃபேஷன் கம்பெனியில் வேலை செய்யும் தனது நண்பர்களை அழைத்துவந்து இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைத்து சென்று விட்டதாகவும், எந்த தரப்பிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.
இது சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்சனை இல்லை என்றும் தற்செயலாக இரண்டு நபர் மற்றும் அவர்களது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரியவருகிறது. இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
14.01.2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26.01.2023 அன்று நடைபெற்றதாகவும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வடஇந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்