Breaking News

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் என பரவும் வீடியோ உண்மை என்ன? kovai bharathiar university leopard

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தமிழகத்தில் கோவையில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் மாறாக பிரேசில் நாட்டில் 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ம் தேதி ஓர் பண்ணை வீட்டில் இரண்டு சிறுத்தைகள் உள்ள வீடியோவை தனது யூடியுப் பக்கத்தில் ஓருவர் வெளியிட்டு உள்ளார்  என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-
 
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் என ஓர் வீடியோவை பலரும் வாட்ஸப் பேஸ்புக், யூடியூப் என பலவற்றிலும் ஷேர் செய்து வருகின்றார்கள், ஆனால் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது ஆகும்

பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட ஓர் வீடியோவை தமிழகம் கோவையில் நடந்து என பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
 
 
முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=BQioXFN6tnc

 

kovai bharathiar university leopard 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback