Breaking News

BREAKING NEWS 30 மற்றும் 31 ம்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் முழு விவரம்

அட்மின் மீடியா
0

30 மற்றும் 31 ம்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

 


வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

இந்தநிலையில், இன்று மீண்டும் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். 

ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்திய வங்கிகள் அமைப்பு, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும். அதில், வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும். என முடிவு எட்டப்ப்ட்டதை அடுத்து ஜன 30,31 அன்று நடைபெறவிருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 முன்னதாக ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்துதல், அனைத்து பணியாளர்களிலும் போதுமான ஆட்சேர்ப்பு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றுதல் மற்றும் பிறவற்றைக் கோரி ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback