Breaking News

பொங்கல் பரிசு டோக்கன் பெறாதவர்கள் பொங்கல் பரிசு எப்போது வாங்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொங்கல் பரிசு டோக்கன் பெறாதவர்கள் பொங்கல் பரிசு எப்போது வாங்கலாம் முழு விவரம்



தமிழகம் முழுவதும் நாளை (9ம் தேதி) பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறாா். மேலும் வரும் 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி டோக்கன் பெற்றவர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ந் தேதி ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து பொங்கல் தொகுப்பினை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள்  1967 மற்றும் 1800 425 5901 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback