Breaking News

நேபாளில் 72 பேருடன் தரையிறங்கும் முன் தீப்பிடித்து நொறுங்கிய விமானம்! விபத்து வீடியோ nepal flight accident

அட்மின் மீடியா
0

 நேபாளத்தில் பொக்காரா விமான நிலையம் நோக்கி 72 பேருடன் சென்ற விமானம், தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தின் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பற்றியது. 


நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் எட்டி ஏர்லைன்ஸ் விமானமான 9என்-ஏஎன்சி ஏடிஆர்-72 என்ற விமானம் காத்மாண்டுவில் இருந்து காலை 10.33 மணிக்கு புறப்பட்டு  பொக்காரா சென்றது அங்கு விமானம் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியது

பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், இதுவரையில் 29 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்த பகுதியில் இருந்து மீட்பு பணி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நேபாள விமானம், கட்டுப்பாட்டை இழந்து பலத்த சத்தத்துடன் தரையை நோக்கி பாய்ந்து வரும்போது பதிவு செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


விமான விபத்து வீடியோக்கள் பார்க்க:-

https://twitter.com/aerowanderer/status/1614511252017131522

https://twitter.com/looneyloserguy/status/1614569496681025536

https://twitter.com/activistjyot/status/1614530146803015680

https://twitter.com/SanjayBragta/status/1614517351495651331

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback