உம்ரா, சுற்றுலா செல்ல விமான டிக்கெட் இருந்தாலே போதும் விசா தேவையில்லை புதிய நடைமுறை விரைவில் 4 days Visa With Flight Ticket Saudi Airline Announces
உம்ரா, சுற்றுலா செல்ல டிக்கெட் இருந்தாலே போதும் விசா தேவையில்லை புதிய நடைமுறை விரைவில்
சவுதி ஏர்லைன்ஸின் உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்ற திட்டத்தின் கீழ் நீங்கள் சவுதியில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) சவூதியில் இருக்க அனுமதிக்கும்.
இந்த 4 நாட்களில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் உம்ரா செய்யலாம்.சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும் என கூறப்படுகின்றது
புதிய நடைமுறையின் படி:-
சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் பயணிகள் விமான டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் ஆம் என்பதை செலக்ட் செய்தால் போதும் விமான டிக்கெட்டுடன் விசாவும் சேர்ந்து வந்து விடும்,
உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்ற இந்த புதிய வகையான விசாவைப் பயன்படுத்தி, ஜித்தா விமான நிலையம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும்நீங்கள் இறங்கலாம். பயணத்தை முடித்துக் கொண்டு உங்களுக்கு வசதியான விமான நிலையத்திலிருந்தும் தாயகம் திரும்பலாம்.
டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
NEWS SOURCE:-
Saudi airline announces 96 hour visa with flight ticket
Saudi Arabia to launch visa-free entry ticket for 4 days
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்