Breaking News

குஜராத் மற்றும் இமாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துகணிப்பு - முழு விவரம் Gujarat Exit Poll Result 2022

அட்மின் மீடியா
0

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று தேர்தலுக்கு பிந்தைய தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி என்று குஜராத்தில் மும்முனை போட்டி இருந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நியூஸ் எக்ஸ்,.ரிபப்ளிக் டிவி , டிவி9 குஜராத்தி  ஆகிய தனியார் தொலைகாட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில்

பாஜக 117 முதல் 148 இடங்கள் 

காங்கிரஸ் 30 முதல்  51 இடங்கள் 

ஆம் ஆத்மி கட்சி 2 முதல் 13 இடங்கள் 

வரைக்கும் பெற வாய்ப்பு இருக்கிறது என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.குஜராத்தில் தொடர்ச்சியாக 6வது முறையாக ஆட்சி அமைக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது . தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி என்று மும்முனை போட்டி இருந்ததால் இங்கு யார் ஆட்சியை பிடிப்பார்கள் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இந்நிலையில்   தனியார் தொலைகாட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில்

பாஜகவுக்கு 32 முதல் 40 இடங்கள் 

காங்கிரஸ் கட்சிக்கு 27 முதல் 34 இடங்கள் 

ஆம் ஆத்மி கட்சிக்கு 1 இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது 

என தேர்தலுக்குப் பிந்தைய தனியார் தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback