Breaking News

மாண்டஸ் புயல் எந்த எந்த மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் , மஞ்சள் அலர்ட் முழு பட்டியல் red alert in tamilnadu

அட்மின் மீடியா
0

மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . பல்கலைக்கழக, தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்து, ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வந்து நீர்நிலைகள், மரங்கள் அருகே நின்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 270 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கில் சுமார் 240 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது வடமேற்கு திசையில் நகர்ந்து  இன்று நள்ளிரவு - நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதே நேரத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பு:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf


Cyclone Mandous red alert in tamilnadu

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback