நாளை உருவாகின்றது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகிறது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.மேலும் இந்த மாண்டஸ் புயல் கடந்த 10ம் தேதி கரையை கடந்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்