Breaking News

மீண்டும் வங்ககடலில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு? வானிலை ஆய்வுமையம் தகவல்

அட்மின் மீடியா
0

மாண்டஸ் புயல் கரையை கடந்து விட்ட நிலையில் வங்க கடலில் வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம். தெரிவித்துள்ளது 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் காலை கரையை கடந்து சென்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுவிழந்து. அரபிக் கடல் பகுதிக்குச் சென்றது.இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.  இது புயல் சின்னமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், மேலும் தற்போதைய கணிப்பு படி இது புயலாக மாறி இலங்கை அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பது என்றும், அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கனமழை சாத்தியக்கூறுகள் இருக்கும் என்றும், இந்த புயல் உருவாகும் பட்சத்தில் ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்திருக்கும் மோகா என்கிற பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback