பள்ளிவாசல் கழிவறை மற்றும் சுற்றுசுவர் கட்ட விண்ணப்பிக்கலாம் வக்ப் வாரியம் அறிவிப்பு Tamil Nadu Waqf Board
அட்மின் மீடியா
0
தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள்
கழிவறை மற்றும் கபர்ஸ்தான் சுற்றுச்சுவர் புனரமைப்பு குறித்த விபரங்களை மஸ்ஜித்
நிர்வாகிகள் அந்தந்த மண்டல வக்பு கண்காணிப்பாளரிடம் அல்லது வக்பு வாரிய
தலைமையகத்தில் வழங்கி கோரப்பட்டால் தகுந்த ஆய்வுக்குப் பிறகு அதற்கான நிதி
வாரியத்திலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழக வக்ப் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு வக்பு வாரிய சிறப்புத்
தீர்மானித்தின்படி, தமிழ்நாடு வக்பு வாரியம் தனது தீர்மானம் இனம் எண்.82/22
நாள் 11.05.2022ல் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வைப்பு நிதியாக
வைக்கப்பட்டுள்ள வக்பு நிறுவனங்களுக்கு பாத்தியப்பட்ட தொகையிலிருந்து
பெறப்படும் வட்டி தொகையினை கொண்டு வக்பு நிறுவனங்களுக்குக் கழிப்பறை
வசதிகள் மேற்கொள்ளவும் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொள்ளவும்
அனுமதிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கட்டுமானப் பணிகள்
மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வக்பு நிறுவனங்களிடமிருந்து உரிய
பிரேரனைகள் பெற்று சமர்ப்பிக்குமாறு அனைத்து வக்பு கண்காணிப்பாளர் மற்றும்
ஆய்வாளர்களுக்கு 13.05.2022 நாளிட்ட சுற்ற்றிக்கை மூலம் உத்தரவிடப்பட்டது.
அதன்படி
சரக அலுவலர்களால் வக்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு
சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைகள் வாரியத்திற்கு தேவைப்படும் முழு விவரங்கள்
இல்லாமல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்விசயம் சம்பந்தமாக வாரியத்தால்
கலந்தாலோசிக்கப்பட்டு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து வக்பு நிறுவனங்களும்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் மாண்புமிகு தலைவர் மற்றும்
உறுப்பினர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அம்மாவட்டங்களிலுள்ள
உதவி கோரும் வக்பு நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு சமர்ப்பிக்கப்படும்
அறிக்கையின்படி இத்திட்டத்தினை செயல்படுத்தலாம் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
ம
ேற்படி
அறிக்கையினை வருகிற 10.11.2022க்குள் வாரியத்திற்கு அனுப்பிவைக்க
மாண்புமிகு வாரியத் தலைவர் மற்றும் மாண்புமிகு உறுப்பினர்கள் கனிவுடன்
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(i) உரிமம் பெற்ற கட்டுமானப் பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட வரைபடம்
மற்றும் திட்ட மதிப்பீடு.
(ii) கட்டுமானம் சம்பந்தமாக வக்பு நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட தீர்மானம்.
(iii) வக்பு கண்காணிப்பாளர் மற்றும் வக்பு ஆய்வாளரால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கள ஆய்வு அறிக்கை.
(iv) நிதி உதவி கோரும் வக்பு நிறுவனங்கள் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். மேலும் ஆண்டு கணக்குளை வக்பு வாரியத்திற்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.
(v) நிதி உதவி கோரும் வக்பு நிறுவனங்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய சகாயத் தொகையினை நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும்.
(vi) இத்திட்டத்தினை செயல்படுத்தவுள்ள வக்பு நிறுவனம் சார்ந்த இடத்தின்
மீது எவ்வித வில்லங்கமும் இல்லை என்று முத்தவல்லியால் வழங்கப்பட்டுள்ள சான்று. ஆகிய அனைத்தும் கொண்டு விண்னப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக வக்ப் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை படிக்க:-
waqf
board chairman,waqf meaning,waqf full form,wakf meaning,wakf,waqf board
property,what is waqf board,waqf board property search,delhi waqf
board,waqf property list,waqf board means,waqf property,wamsi
portal,waqf board online,muslim waqf board,sunni waqf board property
list,,wakf board website,waqf board members. tn waqf board,Tamil Nadu
Waqf Board
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி