அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்- மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் Safety Precautions During Rains
அட்மின் மீடியா
0
தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்..
எனவே முன்கூட்டியே மக்கள் கீழ்க்காணும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்
மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்
செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்
இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்
பிஸ்கட்
பால்
அவசர மாத்திரைகள்
பேட்டரி செல்கள்
மெழுகுவர்த்தி
காய்கறிகள் ,மளிகை சாமான்கள் முன்னதாக தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்
மழை பொழியும் சமயத்தில் வெளியே அல்லது வெளியூர் செல்வதை தவிர்க்கவும்.
குழந்தைகளை தேவையின்றி வெளியே விட வேண்டாம்
குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்
குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்,மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்
மிகவும் முக்கியமாக இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்
இடி, மின்னலின்போது வெட்டவெளி, திறந்தவெளியில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.
இடி மின்னல் சமயத்தில் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்
இடி மின்னல் சமயத்தில் மரங்களுக்கு அருகாமையில் ஒதுங்குவதை தவிர்க்கவும்.
இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்
வெளியில் செல்லும் போது மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்
தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
வீண் வதந்திகளை நம்பவோ,பரப்பவோ வேண்டாம்.
இந்த மழையிலிருந்து நம்மையும் நம் உடமைகளையும் இறைவன் பாதுகாப்பானாக...மக்கள் நலனில் என்றும்....
வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டிக் கொள்ளவும்.
வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களது வீடு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், புயல் வீசத் தொடங்கும் முன்பாகவே, பாதுகாப்பான, வேறு இடத்திற்கு சென்று விடவும்
மக்கள் நலனில் என்றும்.... உங்கள் அட்மின் மீடியா
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்
Safety Precautions During Rains
safety precautions in rainy days
Precautions to be Taken During Rainy Season
Tags: தமிழக செய்திகள்