வாட்ஸப்பில் வந்தது கருத்துகணிப்பு ஆப்ஷன் உபயோகபடுத்துவது எப்படி How To Create a Poll In WhatsApp
அட்மின் மீடியா
0
வாட்ஸப்பில் வந்தது கருத்துகணிப்பு ஆப்ஷன் உபயோகபடுத்துவது எப்படி How To Create a Poll In WhatsApp
தற்போது உலக மக்களில் பிரிக்கமுடியாதது வாட்ஸப் என்ற நிலை உருவாகி விட்டது, வாட்ஸ் அப் இல்லையென்றால் ஒரு நொடி கூட இருக்க முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் கருத்துக்கணிப்பு ஆப்ஷன் புதிதாக கொண்டுவந்துள்ளது
இதன்படி குரூப் சேட்களில் பயனர்கள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும், இந்த கருத்துகணிப்பில் 12 விருப்பங்கள் வரை இருக்கும்
வாட்ஸப்பில் கருத்துகணிப்பு ஆப்ஷன் எப்படி:-
முதலில் உங்கள் வாட்ஸப்பை பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்யுங்கள்’
அடுத்து வாட்ஸப்பில் உள்ள மெசஜ் பாரில் உள்ள பின்னை செலக்ட் செய்யுங்கள் அதாவது புகைப்படம் அனுப்ப கிளிக் செய்வீர்களே அதனை கிளிக் செய்யுங்கள்
அடுத்து அதில் புதிதாக இருக்கும் POLL ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
அதன் பின்பு அதில் உங்கள் கேள்வியினையும் அதற்க்கான ஆப்ஷனையும் டைப் செய்யுங்கள்
அடுத்து அதனை ஷேர் செய்யுங்கள் அவ்வளவு தான்
கடந்த சிலநாட்களுக்கு முன்பு வாட்ஸப்பில் ல் புதியதாக Communities என்ற Update வந்தது குறிப்பிடத்தக்கது
இந்த கம்யூனிட்டி மூலம் நீங்கள் எந்த எந்த குழுவில் Adminஆக இருக்கறீர்களோ அந்த குழுவை ஒரு சேர ஒரே குழுவின் கீழ் கொண்டு வர வசதி இது. இதன்மூலம் ஒரே நேரத்தில் அனைத்து நபர்களுக்கும் செய்தி அனுப்ப முடியும். நீங்கள் மட்டுமே இந்த குழுவில் இருப்பதாக தோன்றும். தேவையற்ற செய்திகளை தவிர்த்து, முக்கியமான செய்திகளை பகிர முடியும்.
Tags: தொழில்நுட்பம்