Breaking News

இனி விமான பயணத்தில் முககவசம் கட்டாயமில்லை - விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

விமான பயணத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

 


கொரோனா பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் கட்டாயம் எனவும் விதிகளை மீறுபவர்களுக்கான அபராதமும் அறிவிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து  மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிவது அவர்களது விருப்பம் எனவும் கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பயணிகளும் முகமூடி/முகக் கவசங்களைப் பயன்படுத்துவது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback