Breaking News

மலேசிய தேர்தல் யாருக்கும் பெரும்பான்மை இல்லை முதல் முறையாக கூட்டணி அரசு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மலேசிய பாராளுமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி கலைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை பிரதமர் சாப்ரி யாகூப் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி 222 இடங்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு 15-வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்று முடிவடைந்தது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் ஆனால் இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. ஞாயிறு காலை வரை உள்ள தகவல் படி

எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கட்சி  83 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. 

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இஸ்மாயில் சாப்ரி யாகூப் தலைமையிலான கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

மலேசியாவில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback