Breaking News

சென்னையில் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து காவல் பத்திரிக்கைச் செய்தி

அட்மின் மீடியா
0

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பத்திரிக்கைச் செய்தி 02.11.2022 காலை 06.00 மணி

வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1. மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:

a) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

b) கணேசபுரம் சுரங்கப்பாதை

2. மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடைபெற்றுள்ளது:

a) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

b) கணேசபுரம் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

3. மழைநீர் பெருக்குகாரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு:

a) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல் இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

b) கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

4. சாலையில் பள்ளம்:

Nil

5. மாநகரபேருந்து போக்குவரத்து மாற்றம்:

a) இரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லக்கூடியவாகனங்களை அதின் உள்ளே அனுமதிக்கப்படாமல்

இரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

b) கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

6. மரங்கள் விழுந்து அகற்றும் பணி:

1. அபிராமபுரம் 3 வது தெரு

2. கீழ்பாக்கம் மகரிக்ஷி பள்ளி அருகில்





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback