9 ம்தேதி வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு முழு விவரம் bay of bengal
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது மேலும் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு, வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் எனஅவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்