ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் யஸ் ஆகிய 7 பேரில் பேரறிவாளனை , கடந்த மே மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது.
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரும் தங்களையும் விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
இந்த வழக்கை நீதிபதி டி.ஆர்.கவாய் , நாகரத்னா அமர்வு விசாரித்து வந்தநிலையில் இன்று முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏனைய ஆறு பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 161 வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்