அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வரும் சனிக்கிழமை (நவ.19) செயல்படும் என அறிவிப்பு
வரும் சனிக்கிழமை (நவ.19) தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைநாளாக அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த அக்டோபர் 24ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டியையை கொண்டாட மக்கள் சொந்த ஊர் சென்றதால், தீபாவளிக்கு மறுதினம் செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரால் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி ஊருக்கு வர எளிதாக இருக்கும் வகையில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய் கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் விடுமுறை அறிவிக்கும் போதே, அந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 19ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்