Breaking News

ஹீட்டரில் மின்சாரம் தாக்கி புதுமண மருத்துவ தம்பதிகள் உயிரிழப்பு Newly married Doctor Couple Dies

அட்மின் மீடியா
0

ஹைதராபாத் இரண்டு மாத புது மண தம்பதிகள் மருத்துவர் Dr சையத் நூருதின் MBBS MD அவர் துனைவியார் மருத்துவர் Dr உம்மே முஹைமீன் சல்மா வாட்டர் ஹீட்டாரால் ஷாக் அடித்து இருவரும் வஃபாதாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி......21 ஆகஸ்ட் மாதம் 2022 ல் திருமணம் நடந்தது 21 அக்டோபரில் துயர சம்பவம் நிகழ்ந்து விட்டது



ஹைதராபாத்தில் உள்ள லாங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதர் பாக் பகுதியில் உள்ள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும்  26 வயதான சையத் நிசாருதீன் இவர் சூர்யாபேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார்

இவர் சில மாதங்களுக்கு முன்பு உம்மி மொஹிமீன் சைமா வயது 22 என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர் டெக்கான் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகின்றார்

இந்நிலையில் கடந்த 20.10.2022  அன்று சைமா  அவர்களது தந்தை அப்துல் அஹத் தனது மகளை தொலைபேசியில் அழைத்துள்ளார் ஆனால் போன் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் நேரில் வந்து கதவை தட்டியும் திறக்காததால் போலிசாருக்கு தகவல் தரப்பட்டது உள்ளே சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ​​சையத் நிஸாருதீன் மற்றும் அவரது மனைவி உம்மி மொஹிமீன் சைமா இருவரும் குளியலறையில் இறந்து கிடந்தனர்.

போலிசாரின் முதல்கட்ட விசாரனையில் 

குளியலறையில் குளிக்கும் போது சைமாக்கு ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியிருக்கலாம் என்றும்,மனைவியை காப்பாற்ற சென்ற நிசாருதீனும் ஷாக் அடித்து இறந்து இருக்கலாம் என தெரிய வந்தது இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ தம்பதிகல் ஷாக் அடித்து எதிர்பாரதவிதமாக இறந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

dr. syed nisaruddin and his wife umme mohimeen saimah

dr. syed nisaruddin died

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback