துபாயில் பறக்கும் கார் அறிமுகம் - வீடியோ Flying car takes off in Dubai
சீன எலக்ட்ரானிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பெங் இன்க்(Xpeng Inc) தற்போது பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது மேலும் தான் தயார் செய்துள்ள எக்ஸ்2 காரின் சோதனை ஓட்டத்தை துபாயில் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
காரின் சிறப்பம்சம்:-
எக்ஸ்2 என்று பெயரிடப்பட்டுள்ள பறக்கும் காரின் சோதனை ஓட்டத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடத்தி உள்ளது.
முழுவதும் எலக்ட்ரிக் செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் வசதி கொண்ட (eVTOL) கார் ஆகும்.
ஆளில்லாமல் கார் சோதனை சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட்டது மேலும் இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது
இரண்டு பேர் அமரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த காரில் மொத்தம் 8 இறக்கைகள் உள்ளன.
உலகில் முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இந்த பறக்கும் கார் பறந்து சென்றது.
முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்த வகை கார் பயன்பாட்டுக்கு வெறும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பலரும் இந்த பறக்கும் கார் எப்போது சந்தைக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.,
பறக்கும் கார் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=YamB77CYPe8
Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ