Breaking News

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்கின்றது ரிசர்வ் வங்கி

அட்மின் மீடியா
0

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 

டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதனை குடிமக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப் போல இந்த டிஜிட்டல் கரன்சியையும் வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம். இது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback