அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு.!
அரசு பள்ளிகளில் அங்கன்வாடிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் மொத்தமாக செயல்பட்டு வந்த 2,381 அங்கன்வாடிகள் மீண்டும் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும், அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும், இவர்களின் வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை என மழலைகளுக்கு பாடம் நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்