Breaking News

குவைத்தில் வேலைக்கு சென்ற பெண் எப்படியாவது காப்பாத்துங்க என வீடியோவில் கதறல்..

அட்மின் மீடியா
0

 குவைத்தில் வேலைக்கு சென்ற பெண் எப்படியாவது காப்பாத்துங்க என வீடியோவில் கதறல்..


சென்னை தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் இவரது மனைவி புவனா, வயது 37.இவர், எட்டு மாதங்களுக்கு முன், ஜான்சன் என்பவர் மூலம், குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றார்.

இந்நிலையில் புவனா தனது கணவருக்கு கண்ணீருடன் வீடியோ ஒன்றை  அனுப்பியுள்ளார். 

அதில் 20 மணி நேரம் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும் அடித்து அவமானப்படுத்துகின்றார்கள், சரியாக உணவு கொடுப்பதில்லை, கழிப்பறையில் தான் தங்குகின்றேன் என கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது மேலும் மனைவியை மீட்டுத்தரக்கோரி ஜேம்ஸ் பால் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback