மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்த ஒ.பி.எஸ்
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து புதிய நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
நிர்வாக வசதியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு என்று இரண்டு மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்
க. வேங்கையன்- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் (கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிகள்),டி.என். பாஸ்கர், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்( ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிகள்) பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார் \
மேலும் சேலம் மாநகர் - சேலம் புறநகர் என்று கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள் நிர்வாக வசதியை முன்னிட்டு சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு ,சேலம் புறநகர் கிழக்கு ,சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என்று ஐந்து மாவட்டங்களாக இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
என். தினேஷ், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்),எடப்பாடி பி. ஏ. ராஜேந்திரன், சேலம் புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்( எடப்பாடி, சங்ககிரி சட்டமன்ற தொகுதிகள்).
எ. பெரியசாமி, சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் (ஆத்தூர், கங்கவல்லி சட்டமன்ற தொகுதிகள்)
எம். ஜெய்சங்கர், சேலம் புறநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர், ( வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகள்)
என். ராஜ்குமார், சேலம் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்( மேட்டூர், ஓமலூர் சட்டமன்ற தொகுதிகள்)
எ.மணிகண்டன் என்கிற ராஜ்குமார் ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளராக இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்