தாஜ் மஹால் ஷாஜகானால் கட்டபட்டது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை- உச்சநீதிமன்றத்தில் மனு
தாஜ் மகால் இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது என வரலாறு கூறுகின்றன.
தாஜ்மஹாலை ஷாஜஹான்தான் கட்டினார் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரஜ்னீஷ் சிங் என்பவர் தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்துள்ளது. இதனை இடித்துவிட்டுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தேகத்தை போக்க தாஜ்மஹாலின் கீழ் உள்ள 22 ரகசிய அறைகளை திறந்து காட்ட வேண்டும். அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு அனுமதி மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், "இன்று தாஜ்மஹால் ரகசிய அறையை திறக்க சொல்வீர்கள். நாளை நீதிபதிகளின் அறையை திறந்து காட்ட அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடுவீர்களா?" என கேள்வியெழுப்பி இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ரஜ்னீஷ் சிங்.
அந்தமனுவில், தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றைக் கண்டறிய உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்என்றும், தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப்பட்டது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று அந்த மனுவில் கூறியுள்ளார் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
Tags: இந்திய செய்திகள்