நாள் முழுவதும் மெட்ரோ ரெயிலில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ.100 பாஸ் Chennai Metro one day pass just Rs 100
நாள் முழுவதும் மெட்ரோ ரெயிலில் விருப்பம் போல் பயணம் செய்ய ரூ.100 கட்டணத்தில் தினசரி பாஸ் Chennai Metro one day pass just Rs 100
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது.
சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு 42 ரெயில்கள் தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ரூ.100 கட்டணத்தில் வழங்கப்படும் தினசரி பாஸ்க்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் தினசரி பாஸ் என்ற திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது.
100 ரூபாய் தினசரி பாஸ் சிறப்பம்சம்:-
பயணத்தை தொடங்கும் எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலும் ரூ.100 பயண கட்டணமும், பயண அட்டைக்கு ரூ.50 செலுத்தி இந்த தினசரி பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம்.
கடைசி பயணத்தை முடிக்கும் ரெயில் நிலைய கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்து ரூ.50-யை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தினசரி பாஸ்-ஐ யார் வாங்கினார்களோ? அவர்களே தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
மாதந்திர பாஸ் திட்டம்
மாதந்திர பாஸ் ரூ. 2500 மற்றும் பயண அட்டைக்காக ரூ. 50 செலுத்தி மாதாந்திர பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டம் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், என பலரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மெட்ரோ ரயில் அறிவிப்பை பார்க்க:-https://chennaimetrorail.org/wp-content/uploads/2019/06/Tourist-Card2019.pdf
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி