Breaking News

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை முழு விவரம்....

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 


தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு தாள்-1 தாள்-2 என்று 2 நிலைகளில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1ல் லெட்டர் & ஸ்டேட்மெண்ட், தாள்-2ல் ஸ்பீடும் இருக்கும் என்பது போன்று நிலையில் உள்ளது.எனவே, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில் தாள்-1ல் ஸ்பீட் தேர்வும், தாள் - 2ல் ஸ்டேட்மெண்ட் & லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிட வேண்டும் என மனு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி; தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1ல் ஸ்பீடு தேர்வும், தாள்-2ல் லெட்டர் & ஸ்டேட்மென்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள்; தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம் போல் நடைபெறும் என தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது எனக் கூறி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback