கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகள் – உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவு
திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி சதிகுமார் சுகுமார குருப் அதுகுறித்து கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணையின் போது நீதிபதி சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் அதாவது
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் மற்றும் பாடல்களோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது.
அரசியல் மற்றும் மத ரீதியான பிளக்ஸ்கள் இடம் பெற கூடாது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக்கூடாது.
நிகழ்ச்சியின் போது பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இருக்க கூடாது.
இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்தபட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்