வாட்ஸப்பில் யாரும் எதிர்பார்க்காத கருத்துக்கணிப்பு ஆப்சன் சூப்பர் அப்டேட்!
அட்மின் மீடியா
0
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸப் செயலியானது தனது பயனர்களை ஈர்க்கும் வகையில் கருத்துக்கணிப்பு ஆப்ஷன் கொண்டுவர தயாராகி வருகிறது.
இதன்படி குரூப் சேட்களில் பயனர்கள் கருத்துக் கணிப்புகளை உருவாக்க முடியும், இந்த கருத்துகணிப்பில் 12 விருப்பங்கள் வரை இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாங்கள் இந்த அப்டேட்டை தற்போது உருவாக்கிக்கொண்டிருக்கிறோம், எனவே விரைவில் பீட்டா வர்ஷனில் வரும் என வாட்ஸப் நிறுவனம் கூறியுள்ளது. வழக்கமான சாட் பகுதியில் இதற்கான வசதிகள் இருக்கும் என்றும், இது Android 2.22.10.11 க்கான WhatsApp பீட்டாவின் அப்டேட்டில் இதனை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தொழில்நுட்பம்