Breaking News

காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய முதலமைச்சர்- வைரல் புகைப்படம்

அட்மின் மீடியா
0

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 


தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அதன்படி 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கப்படுகிறது.


இதற்காக தமிழக அரசு ரூபாய் 33.56 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மதுரை மாவட்டம் , நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து மாணர்களுடன் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்..இந்த புகைபடங்கள் த்ற்போது வைரல் ஆகின்றது








Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback