Breaking News

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று  7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 



இதுக்குறித்து வெளியான செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா 07.09.2022 ( புதன் கிழமை ) அன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 07.09. 2022 ( புதன் கிழமை ) அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க தகுந்த ஆணைகள் பிறப்பிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறும் நாளான 07.09.2022 ( புதன் கிழமை ) அன்று அம்மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அறிவிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. மேலும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று பணிநாளாக அறிவிக்கவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback