தைவானில் 6.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வீடியோக்கள்
தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், யூலி நகரில் உள்ள ஒரு கிராமத்தின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்தது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Terror_Alarm/status/1571426353349541889
Tags: வெளிநாட்டு செய்திகள்