Breaking News

ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப உத்தரவு! முழு விவரம்

அட்மின் மீடியா
0

 ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.govtதமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசின் பொதுவிநியோக திட்டத்தின் படி அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 


 

அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும் ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கட்டுனர் பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback