Breaking News

கோவாவில் 11 காங்கிரஸ் MLAக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்!

அட்மின் மீடியா
0

கோவாவில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 8 பேர் கூண்டோடு பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

 


கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் இன்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 

திகம்பர் காமத், 

மைக்கேல் லோபோ, 

டெலிலா லோபோ, 

ராஜேஷ் பல்தேசாய், 

கேதார் நாயக்,

சங்கல்ப் அமோன்கர், 

அலெக்சோ செக்வேரா, 

ருடால்ப் பெர்னாண்டஸ் 

ஆகிய 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர் என கூறப்படுகிறது. 

 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில் ஆட்சி அமைக்க 21 எம்.எல்.ஏக்கள் தேவை. சட்டசபை தேர்தலில் பாஜக 20 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் வென்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 2 எம்.எல்.ஏக்கள்உள்ளனர். சுயேட்சைகளின் ஆதரவுடன் கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் மற்றும் முதல்வர் பிரமோத் சாவத்தை சந்தித்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback